மேலும் 5,000 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்

 மேலும் 5,000 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்



இம்மாத இறுதிக்குள் கிட்டத்தட்ட 5,000 கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது 29 சிறைச்சாலைகள் மற்றும் இரண்டு புனர்வாழ்வு நிலையங்களிலும் 25,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் சம்பந்தப்பட்ட நிலையங்களின் 11,200 பேரை மட்டுமே தடுத்து வைக்க முடியும் என்றும் லொஹான் ரத்வத்தே சுட்டிக்காட்டினார்.

இத்தோடு கடமைகளை ஏற்றுக்கொண்டதிலிருந்து 3,000 கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்றும் மேலும் 5,000 கைதிகளை டிசம்பர் இறுதிக்குள் விடுவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ,சிறு குற்றங்களுக்கு அபராதம் செலுத்த முடியாத கைதிகளும் பிணையில் செல்ல முடியாத மற்றவர்களும் அதன்படி விடுவிக்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.