வெகு விரைவில் மட்டக்களப்பு நகரில் பிரதான வீதியில் நான் தீக்குளிப்பேன் – எனது தற்கொலைக்கு பொலிஸ் மாஅதிபரே காரணம்.

 வெகு விரைவில் மட்டக்களப்பு நகரில் பிரதான வீதியில் நான் தீக்குளிப்பேன் – எனது தற்கொலைக்கு பொலிஸ் மாஅதிபரே காரணம்.



மட்டக்களப்பில் வாழ்வதையிட்டு வெட்கமடைகிறேன், நகரின் பிரதான வீதிலில் வெகு விரைவில் தீக்குளிப்பேன் என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் வைத்து இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.

அந்த காணொளியில் மேலும்,

மங்களகம பொலிஸ் நிலையத்திலேயே அதிகளவான வழக்குகள் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. திசாநாயக்க என்ற அதிகாரியே கூடுதலான வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

ஒரு சம்பவத்திற்கு நான்கு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். ஒரு விடயத்தை நான்காக பிரித்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மொனராகலை சிறைச்சாலைக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. என்னைப்போன்ற ஒரு ஏழைத் தேரருக்கு இலட்ச ரூபாவை செலுத்தி பிணை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் அறிவித்துள்ளேன். எனினும் எனக்கான நியாயம் கிடைக்கவில்லை. செங்கலடி பிரதேச செயலாளரால் எனக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பன்குடாவெளி விகாரையை மீளக் கையளிக்க முடியாதென அவர் அறிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நாட்டில் தொல்பொருள் திணைக்களமொன்று காணப்படுகிறது.

அமைச்சர்கள் இருக்கின்றார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத் தருமாறு நான் கேட்கின்றேன். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் பௌத்த மதத்தை பாதுகாக்குமாறு கேட்கின்றேன்.

என்னுடைய வழக்குகளுக்கு பொலிஸ் மா அதிபரால், நீதி அமைச்சரால் மற்றும் பௌத்த சமய விவகார அமைச்சின் ஊடக மாத்திரமே தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும்.

வெகு விரைவில் மட்டக்களப்பு நகரில் பிரதான வீதியில் நான் தீக்குளிப்பேன். எனது வாழ்க்கையை அழித்துக் கொள்வேன். இவ்வளவு கீழ்த்தரமான நாட்டிலா நாம் வாழ்கின்றோம். மட்டக்களப்பில் நான் வாழ்வதையிட்டு வெட்கமடைகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.