12 வயது சிறுமியின் மரணத்திற்கான காரணம் வௌியானது..

 12 வயது சிறுமியின் மரணத்திற்கான காரணம் வௌியானது..


களவஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி உயிரிழந்த 12 வயதுடைய சிறுமியின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமியின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையின் விஷேட நீதிமன்ற வைத்திய அதிகாரியினால் நேற்று (23) பூரண மரண பரிசோதனை அறிக்கை வௌியிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதில் குறித்த சிறுமிக்கு நீண்ட நாட்களாக தாக்குதல் மேற்கொண்டதினால் ஏற்பட்ட காயத்தின் ஊடாக கிருமி சென்ற காரணத்தினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி பெண்கள் மூவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த சிறுமியின் தாய் வௌிநாட்டில் சேவையாற்றுவதுடன் அவருடைய தாயின் சகோதரியின் அரவணைப்பில் குறித்த சிறுமி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.