தெமட்டகொடயில் மேலும் 15 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்..!
தெமட்டகொடயில் மேலும் 15 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்..!
வேகமாக பரவி வரும் இந்திய கொரோனா வகை முதலில் அடையாளம் காணப்பட்ட தெமட்டகொடையில் மேலும் 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் எந்த வகையான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்த,
சம்பந்தப்பட்ட மாதிரிகள் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தெமட்டகொடை ஆரம வீதி பகுதியில் மொத்தம் 129 பேர் PCR சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
டெல்டா வகை வைரஸ் தொற்றின் அபாயத்தை கருத்தில் கொண்டு தெமட்டகொடை ஆரம வீதிப்பகுதியில் உள்ள மக்களுக்கு இன்று(19) தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
” ஆராமை வீதிப்பகுதியில் உள்ள அனைத்து தோட்டமக்களுக்கும் தடுப்பூசி ஏற்ற நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஏனெனில் இந்த பகுதியில் இந்திய வகை கொவிட் தொற்றாளர்கள் இனங்கனப்பட்டுள்ளனர்.
நேற்றைய PCR பரிசோதனைகளில் மேலும் 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு பகுதியில் நேற்று எழுமாறாக நடத்திய PCR சோதனைகளில் இருந்து சுமார் 70 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். ” என கொழும்பு மாநகராட்சி மன்றத்தின் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.