50 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான உப பொலிஸ் பரிசோதகர்

 50 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான உப பொலிஸ் பரிசோதகர்


உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மூவரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் நேற்று அதுருகிரிய அதிவேக நெடுஞ்சாலை நுழைவுப் பகுதியில் வைத்து கைது செய்திருந்தனர்.

கைப்பற்றப்பட்ட 52 கிலோ 728 கிராம் ஹெரோயின் அஹங்கம பிரதேசத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகி இருக்கும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான சாலிந்து என்பவர் இதன் பின்னணியில் இருக்கின்றமை தெரியவந்துள்ளது.

கடந்த வாரமும் இதே அளவிலான ஹெரோயின் தொகையொன்றை மேல் மாகாணத்திற்குள் விநியோகித்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைதான பொலிஸ் உப பரிசோதகர் உள்ளிட்ட மூவரையும் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.