மீண்டும் திறக்கப்படுகின்றதா பாடசாலைகள்?

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

மீண்டும் திறக்கப்படுகின்றதா பாடசாலைகள்?


பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழந்தை மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ தன்னார்வக் குழுவின் அறிக்கை உரிய நேரத்தில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.


அது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் கூறுகையில்,


பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு சுமார் நான்கு வாரங்களுக்கு முன்னதாக மாணவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியையாவது வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக மூன்று சுற்று விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், தேவையான ஆலோசனைகளை வழங்க மருத்துவ குழு முன்வந்து செயல்படுவதாகவும் கூறினார்.


இந்த வகையில் மருத்துவ வல்லுநர்கள் குழு தயாரித்த அறிக்கை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


மேலும் ,அதை கல்வி அமைச்சரிடம் வழங்கிய பின்னர், ஜனாதிபதியை சந்தித்து இது குறித்து மேலும் விவாதிக்கலாம் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.


✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.