எரிவாயுவின் விலை கிட்டிய எதிர்காலத்தில் அதிகரிக்கப்படாது : அமைச்சர் ஹெகலிய.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
எரிவாயுவின் விலை கிட்டிய எதிர்காலத்தில் அதிகரிக்கப்படாது : அமைச்சர் ஹெகலிய.
அமைச்சரவைச் பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கிட்டிய எதிர்காலத்தில் எரிவாயு விலை அதிகரிக்கப்படாது என உறுதியளித்தார்.
நாட்டிற்குத் தேவையான எல்பி எரிவாயுவின் கொள்வனவு, போக்குவரத்து மற்றும் சேமிப்பைக் கையாள லிட்ரோ கேஸ் நிறுவனம் மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவன உறுப்பினர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைகளில் நிபுணர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், இரண்டு பெரிய எல்பி எரிவாயு வழங்குனர்களான லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் 12.5 கிலோ கிராம் உள்ளூர் எரிவாயு சிலிண்டர்களை 1493 ரூபாவுக்கே விற்பனை செய்யும் எனத் தெரிவித்தார்.
இரு நிறுவனங்களும் கூட்டுறவு முறையில் எரிவாயுவை வாங்கவும் விநியோகிக்கவும் சேமிக்கவும் அனுமதி பெற்றுள்ளன.
இந்த நோக்கத்துக்காக அம்பாந்தோட்டை எரிவாயு முனையம் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.