நாட்டில் இருந்து புறப்படும் வௌிநாட்டு பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இருந்து புறப்படும் வௌிநாட்டு பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க வௌிநாடுகளுக்குச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ள தொழிலாளர்களுக்கு, குறித்த நாடுகளினால் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டில் Sinopharm தடுப்பூசி காணப்படுவதால் அதனை பரிந்துரை செய்யும் நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.