நாடு தொடர்ந்தும் முடக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான

 நாடு தொடர்ந்தும் முடக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான


 சூழ்நிலையை எதிர் நோக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சுகாதாரத் துறையில் காணப்படுகின்ற சவால்களை விட எதிர்காலத்தில் பொருளாதாரத் துறையில் அதிக சவால்கள் ஏற்படக்கூடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாட்டைத் தொடர்ந்தும் முடக்குவதனால் சுகாதாரத் துறைக்கு கிடைக்கும் நன்மைகளை விடவும் பொருளாதாரத்திற்கு அதிக விளைவுகளே ஏற்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பிரியங்க துனுசிங்க தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கல்வித் துறையை மேலும் மூடுவது நீண்டகால மற்றும் நடுத்தர கால விளைவுகளை ஏற்படுத்தும் என்றார். இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில் இலங்கையில் பணவீக்கம் கணிசமானளவு உயர்ந்ததுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 5.5 சதவீதமாக இருந்த பணவீக்கம் மே மாதத்தில் 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலைகள் அதிகரிப்பதே இதற்குக் காரணம் என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டுகின்றது.

அத்துடன், இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, தற்போது அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி 202.89 சதம் வரை குறைந்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.