பிரயாணத் தடையினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஏறாவூர் பிரதேசத்தில் பொதுமக்களை துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ வீரர்களை கடமைகளில் இருந்து இடைநீக்கம்
பிரயாணத் தடையினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஏறாவூர் பிரதேசத்தில் பொதுமக்களை துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ வீரர்களை கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என இராணுவம் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் உத்தரவின் பிரகாரம் இந்த விடயம் தொடர்பில் இராணுவ பொலிஸார் ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் இராணுவம் தெரிவித்தது.
இந்த விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், குறித்த இராணுவ வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவம் மேலும் தெரிவித்தது. இது தொடர்பில் இராணுவம் விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஏறாவூர் பகுதியில் பயணக்கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடியவர்களை தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு வீதியில் முழங்காலில் இருக்க வைத்து இராணுவத்தினரால் தண்டனை வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் நேற்று (19) சனிக்கிழமை வைரலாகியமை குறிப்பிடத்தக்கது.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.