துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்..!

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்..!




கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.


மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் போது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரின் சிபாரிசுகள் கோரப்பட வேண்டும் என இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை, எந்த அடிப்படையில் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என்ற விடயம் பொதுமக்கள் தெரிய வேண்டும் என குறித்த கடிதத்தில் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளது. 


(Vidiyal)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.