இன்றைய மருத்துவ குறிப்பு

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

இன்றைய மருத்துவ குறிப்பு



இரத்த தானத்தைப்பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை தகவல்கள்.


ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கு ஒருமுறையும் ஒருவருக்கு இரத்த மாற்றத்திற்காக இரத்தம் தேவைப்படுகிறது. மேலும் ஒருவர் ரத்த தானம் செய்வதன் மூலம் அவர் மூன்று உயிர்களை காப்பாற்ற முடியும். மேலும் வருடத்திற்கு ஆறு முறை வரை இரத்த தானம் செய்வது பாதுக்காப்பானது ஆகும். மேலும் இரத்த தானத்தில் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க ஒவ்வொரு முறை இரத்தம் எடுக்கும்போதும் புதிய உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


ஆனால் அனைவரும் இரத்த தானம் செய்ய முடியாது. டிமென்ஷியா அல்லது எச்.ஐ.வி வைரஸ் போன்று தொற்று உள்ளவர்கள் இரத்த தானம் செய்ய கூடாது. அதன் மூலம் அவர்கள் தொற்றை மற்றவர்களுக்கு பரப்பி விட நேரிடும். எனவே பாதுக்காப்பாக இரத்த தானம் செய்வது எப்படி என்பதை அறிந்து வைத்திருப்பது மிக முக்கியமாகும்.


👉​எத்தனை முறை இரத்த தானம் செய்யலாம்?


இரத்த தானம் செய்வதில் பல வழிகள் உள்ளன. நீங்கள் இரத்தத்தை முழுவதுமாக தானம் செய்யலாம். அல்லது இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா, சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லேட்கள் போன்ற இரத்த கூறுகளை மட்டும் தானம் செய்யலாம். இரத்த தானம் செய்யும்போது அதில் உள்ள இயந்திரமானது இரத்தத்தை பல்வேறு கூறுகளாக பிரித்து அவற்றை உடலுக்கு வழங்குகிறது.


ஒவ்வொரு இரத்த நன்கொடையை செய்யும்போதும் அதை எவ்வளவு பாதுக்காப்பாக செய்ய முடியும் என்பதுதான் மிகவும் முக்கியம்.


ஒவ்வொரு 56 நாட்களுக்கு ஒருமுறையும் நீங்கள் முழுமையாக இரத்த தானம் செய்ய முடியும். எனவே ஒரு ஆண்டிற்கு சுமாராக 6 முறை இரத்த தானம் செய்ய முடியும் என நியூயார்க் இரத்த மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரியான புரூஸ் சாச்சிஸ் கூறுகிறார். அதே போல நீங்கள் இரத்த பிளேட்லேட்கள் மற்றும் பிளாஸ்மாவை அதிகமாக தானம் செய்யலாம்


👉​பிளேட்லேட்கள் மற்றும் பிளாஸ்மா


பிளேட்லேட்கள் இரத்தப்போக்கை நிறுத்த உதவுகின்றன. மேலும் இரத்த உறைவிற்கு முக்கியமான புரத கட்டிகளை கொண்டு செல்லும் இரத்தத்தின் திரவ பகுதியாக ப்ளாஸ்மா உள்ளது. சிவப்பு ரத்த அணுக்கள் உங்கள் நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றன.


ஆண்டுக்கு 24 முறை இரத்த பிளேட்லேட்டுகளை நன்கொடையாக வழங்கலாம். அதே போல ஆண்டிற்கு 12 முறை பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கலாம். சிவப்பு இரத்த அணுக்களை விட நமது உடல் பிளாஸ்மா மற்றும் பிளேட்லேட்களை வேகமாக உற்பத்தி செய்வதால் அவற்றை நாம் அடிக்கடி தானம் செய்யலாம்.


இரத்த தானம் செய்வது மிகவும் பாதுக்காப்பான ஒரு செயலாகும் என்று ஸ்டான்போர்டு இரத்த மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரியான தோ பாம் கூறுகிறார். இருப்பினும் நீங்கள் அடிக்கடி தானம் செய்தால் அதனால் உங்களுக்கு இரத்த சோகை ஏற்படலாம். உங்கள் இரத்தத்தில் போதுமான அளவில் இரத்த சிவப்பணுக்கள் இல்லாத போது இந்த பிரச்சனைகள் ஏற்படும்.


எனவே ஒவ்வொரு நன்கொடைக்கு முன்பும் நன்கொடை செய்பவர் உடலில் ஹீமோகுளோபின் அளவை சரிப்பார்ப்பது அவசியமாகும்.


👉​யாரெல்லாம் இரத்த தானம் செய்ய கூடாது?


இரத்த தானம் செய்வதற்கு குறைந்தது 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆனால் ஆரோக்கியமான உடல் நிலையை கொண்டிருக்கும் பட்சத்தில் 16 முதல் 17 வயதுடையவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுக்காவலரின் ஒப்புதலுடன் நன்கொடை அளிக்கலாம். ஆனால் 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மருத்துவரிடம் கடிதம் பெற்ற பிறகே இரத்த தானம் செய்ய முடியும்.


அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 38 சதவீதம் மக்கள் இரத்த தானம் செய்யும் தகுதியை பெற்றுள்ளனர். சில தற்காலிகமான காரணங்கள் கூட இரத்த தானம் செய்வதை தடுக்கின்றன.


👉​கர்ப்பம்


கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கூடுதல் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மேலும் அவர்களுக்கு கர்ப்ப காலங்களில் லேசான ரத்த சோகை ஏற்படுவதாலும் அவர்கள் இரத்த தானம் செய்வதில் நிறைய சிக்கல்கள் உள்ளன, எனவே அவர்கள் இரத்த தானம் செய்ய முடியாது. அவர்கள் குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு பிறகே இரத்த தானம் செய்யும் தகுதியை பெறுகின்றனர்.


👉​​மருந்துகள்


சில மருந்துகளை உட்கொள்பவர்கள் தற்காலிகமாக இரத்த தானம் செய்யும் தகுதியை இழக்கின்றனர் அவர்களை எடுத்துக்கொள்ளும் மருந்தை பொறுத்து காலம் மாறுப்படும். எடுத்துக்காட்டாக கூமாடின் அல்லது வார்ஃபிலோன் போன்ற மருத்துகளை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால் அந்த மருந்தை நிறுத்திய ஏழு நாட்களுக்கு பிறகே நீங்கள் இரத்த தானம் செய்ய முடியும்.


ஆனால் தடிப்பு தோல் அழற்சிக்கான வாய்வழி ரெட்டினாய்டு சிகிச்சையான சோரியாடேன் செய்தவர்கள் மூன்று ஆண்டுகள் கழித்தே இரத்த தானம் செய்ய முடியும்.


👉​பாதுக்காப்பாக இரத்த தானம் செய்வது எப்படி?


பாதுக்காப்பான இரத்த தானம் செய்வதற்கு முன்பு நீங்கள் பல விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இரத்த தானத்திற்கு முன் செய்ய வேண்டியவை

உங்கள் இரத்த தானத்திற்கு முன்பு ஏராளமான அளவில் தண்ணீர் குடிக்கவும். சிவப்பு இறைச்சி, மீன் மற்றும் கோழி போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். ஏனெனில் உடலில் புதிய அணுக்களை உருவாக்க உடலுக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.


ஏழு முதல் ஒன்பது மணிநேரம் வரை தூங்க வேண்டும். ​இரத்த தானத்திற்கு முன் செய்ய கூடாதவை

இரத்த தானத்திற்கு முன்பு ஆல்கஹால் குடிக்க கூடாது. அது உடலை நீரிழக்க செய்கிறது.

வறுத்த அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம். ஏனெனில் அதிக கொழுப்பு இரத்தத்தில் இருக்கும்போது நோய்த்தொற்றை கண்டறிய முடியாது.


உங்கள் பிளேட்லேட் நன்கொடை செய்வதற்கு முன்பு குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன் வரை ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் இது இரத்த பிளேட்லேட் செயல்ப்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்.


முழு இரத்த தானம் செய்யும்போது தற்காலிகமாக சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையானது குறைகிறது. எனவே இரும்பு சத்து தொடர்பான மருந்துகளை அப்போது எடுத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக இரத்த தானம் செய்த பிறகு உங்கள் உடலுக்கு அதிக ஊக்கம் தேவைப்படுகிறது.

எனவே இதற்காக வைட்டமின் சி நிறைந்த உணவுகள் பழங்கள், சிட்ரஸ் பழங்கள், மிளகுத்தூள், ஸ்ட்ராப்பெர்ரி ஆகியவற்றை உண்ணலாம். இவை இரும்பு சத்துக்கு சிறந்த மூலங்களாக உள்ளன.


​எட்டு வாரங்களுக்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம்


ஒவ்வொரு எட்டு வாரங்களுக்கு ஒரு முறை அதாவது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நீங்கள் இரத்த தானம் செய்யலாம். நீங்கள் இழந்த சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை சகஜ நிலையை அடைய எட்டு வாரங்கள் ஆகின்றன. சமீபத்திய உங்களது பயண வரலாறு, ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி அல்லது சி போன்ற சுகாதார பிரச்சனைகளை பொறுத்து நீங்கள் இரத்த தானம் செய்ய தகுதியுடையவரா? இல்லையா? என்பது முடிவு செய்யப்படும்.


நீங்கள் இரத்த தானம் செய்வதற்கு முன்பு மது அருந்துவதையும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்க்கவும். அதற்கு பதிலாக போதுமான தூக்கத்தை பெற்றுக்கொள்ளுங்கள். ஏராளமான தண்ணீரை குடிக்கவும், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்ணவும். இது உங்கள் உடலில் இரத்த அணுக்களை உருவாக்க உதவும்.


நீண்ட காலமாக இரத்த தானம் செய்வது என்பது பாதுக்காப்பானதே. இரத்த தானம் செய்யும் பலர் பல ஆண்டுகளாக எந்த விதமான சுகாதார பிரச்சனைகளும் இல்லாமல் தொடர்ந்து இரத்த தானம் செய்து வருகின்றனர்.


✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.