பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த தாய்! அதிர்ச்சி சம்பவம்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
தும்மலசூரிய, மரக்களமுல்ல பிரதேசத்தில் தாய் ஒருவரால் பிறந்த குழந்தை ஒன்று உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய தும்மலசூரிய பொலிஸாரினால் குறித்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தகவல் வழங்கிய நபர், தாய் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்து வீட்டின் பின்புறத்தில் புதைத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நியைில், குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இன்று மதியம் இடம்பெற்றுள்ள நிலையில் குழந்தையின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை மேற்கொண்டு குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் அறிக்கை இடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தும்மலசூரிய பொலிஸாரினால் குறித்த தாய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளார். தும்மலசூரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.