பாரிய வீழ்ச்சியடைந்த மதுபானம் பாவனை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


பாரிய வீழ்ச்சியடைந்த மதுபானம் பாவனை.

நாட்டில் 25 சதவீதத்தினால் மதுபானம் அருந்துவது வீழ்ச்சியடைந்துள்ளதாக கலால் வரித்திணைக்களம் தெரிவிக்கின்றது. 

கொவிட் வைரஸ் தொற்றுக்கு முன்னராக காலத்தில் மதுபானம் அருந்துவதற்காக நாட்டு மக்கள் நாளாந்தம் 50 கோடி ரூபாவை செலவிட்டதாகவும், தற்போது அந்த தொகை 35 கோடி ரூபா வரை வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

 பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையே, இதற்கான காரணம் என தெரிய வருகின்றது. மேலும் இதைதவிர, சட்டவிரோத மதுபான பயன்பாடு, போதைப்பொருள் பயன்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்ற எண்ணப்பாடு மற்றும் அதிக நேரம் அமர்ந்திருந்து மதுஅருந்தும் இடங்கள் மூடப்பட்டமை ஆகியனவும் மதுபானம் அருந்தும் எண்ணிக்கை குறைவடைவதற்கான காரணமாக அமைக்கின்றன என கலால் வரித்திணைக்களம் குறிப்பிடுகின்றது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.