June 15, 2021 at 02:22PM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 "தாஜ்மஹால் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் நாளை திறக்கப்படுகின்றன கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களையும் மூடுமாறு மத்திய தொல்லியல்துறை அறிவிப்பு விடுத்திருந்தது. இதன்படி ,கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொல்லியல்துறை, சுற்றுலா தலங்களை மூட முதலில் உத்தரவு பிறப்பித்தது. அதற்கமைய ,முதலில் மே 15ஆம் திகதி வரை என அறிவிக்கப்பட்டு பின்னர் ஜூன் 15ஆம் திகதி வரை குறித்த முடக்கத்தை தொல்லியல்துறை நீடித்தது. அந்நிலையில் தற்போது, கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமையினால், ஹோட்டல்கள், கடைகள் ஆகியவை திறப்புக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வழிபாட்டு தலங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றையும் திறப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் தாஜ்மஹால் மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் நாளை திறக்கப்படவுள்ளன. மேலும் ,இவ்வாறு சுற்றுலா தலங்களை திறக்கும் நடவடிக்கை மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய நிர்வாக உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டது என்றும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.