யாழ். போதனா வைத்திய சாலையில் கொரோனாவால் நேற்று ஐவர் பலி!

யாழ். போதனா வைத்திய சாலையில் கொரோனாவால் நேற்று ஐவர் பலி!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 நோயாளிகள் ஐவர் நேற்று இரவு 9 மணி வரையான 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வரும் திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த ஒருவரும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அரியாலை யைச் சேர்ந்த 89 வயது ஆண், புத்தூரைச் சேர்ந்த 48 வயது ஆண், பலாலியைச் சேர்ந்த 59 வயது ஆண், கோப்பாயைச் சேர்ந்த 51 வயது பெண் என நால்வர் உயிரிழந்தனர். திருகோணமலை புல்மோட்டை யைச் சேர்ந்த 58 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். 

இதன்படி யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வடைந்துள்ளது.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.