பாடசாலைகள் எப்போது?, எப்படி ஆரம்பிக்கப்படும்..?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 பாடசாலைகள் எப்போது?, எப்படி ஆரம்பிக்கப்படும்..? 

சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைத்த உடனேயே, பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கின்றார். 

சுகாதார நடைமுறைகளின் பிரகாரமே, பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் நிர்வாகத்தினருக்கு கட்டாயம் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

 கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு, பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் அவர் கூறுகின்றார். இவ்வாறான நிலையில், பாடசாலையை மீள ஆரம்பிக்கின்றமை தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிக்கின்றார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.