ஒரு_ஆணை_நம்பி_தன்_அந்தரங்கங்களை_காட்டிய

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 ஒரு_ஆணை_நம்பி_தன்_அந்தரங்கங்களை_காட்டிய 

ஒரு_பெண்ணின்_வாழ்வு_தூக்கு_கயிற்றை_அண்மித்திருக்கிறது

 #சாகும்_முன்_உலக_பெண்களுக்கு_அவள்_விடுக்கும்_செய்தி_கண்ணீரால்_நனைகிறது (கட்டாயம் படிக்க வேண்டிய ஆழக்கடலானின் அவசர அறை கூவல்) என் சக தோழிகளே! உங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி இன்று என்னிடம் இல்லை இதோ சாகும் முன் நான் சொல்லி விட்டு போகிறேன் கேடு கெட்ட இந்த முகவலையில் நல்லவன் போல் ஒருவன் வந்தான் ஆரம்பமே ஹாய்!சகோதரி என்றான் நாங்கள் எல்லா ஆண்களையும் போல் இல்லை பேசுங்கள் என்றான் கண்ணியமானவன் என்று மூன்று பொழுதும் வணக்கங்கள் சொல்வேன் அன்பை விதைத்தவன் காதலில் வீழ்த்தினான் என்னை பற்றியே அடிக்கடி மூச்சு விடுவான் தன் பெயரையும் என் பெயரையும் எழுதி வைத்திருக்கிறான் எனக்காக கவிதை எழுதுவான் நீதானடி என் உயிர் என்றல்லாம் மனம் இரங்கும் வார்த்தைகள் பேசுவான் தூரத்தில் இருப்பவன் என்னை காதலிக்கும் கணவன் ஐயோ!என்னை அனுபவிக்க துடிக்கிறானே அவன் பாவம் அவன் ஆசைகளை கட்டுப்படுத்த என்ன செய்வேன்? 

செய்யாத தப்பை முதன் முதலாக அவனை நம்பி அடியெடுத்து வைத்தேன் அங்கம் அங்கமாய் காட்டி அவன் ஆசையை தீர்ப்பேன் உணர்ச்சி வரும் போதெல்லாம் காட்டடி என்பான் போடா அம்மா இருக்கிறா என்றால் அம்மா வேணுமா? நான் வேணுமா? என்று உருகுவான் இல்லை காட்டடி நீ என்று நிற்பான் காதலன் தானே நாளை என் கணவன்தானே என்று கண்டபடியெல்லாம் கற்பனை செய்தேன் கடவுளே! 

நான் பாவி கடைசியில்த்தானே தெரிந்தது அவன் படு பாவியென்று என்னைப் போல் எத்தனையோ பெண்களை அனுபவித்திருக்கிறான் என்னைப் போன்று எத்தனையோ பெண்களின் அங்கங்களை பார்த்து தன் ஆசைகளை அடக்கியிருக்கிறான் எனக்கு சொன்ன அதே வார்த்தைதான் அவர்களுக்கும் சொல்லியிருக்கிறான் நீ எனக்கு உயிரடி நம்பிக்கையோடு என் உடலையே திறந்து காட்டும் போது படுபாவி ஒவ்வொரு அசைவையும் படம் எடுத்து வைத்திருக்கிறான் நாலு பேருக்கு காட்டுறானாம் எப்படி இவள் வேசையென்று? என் தோழன் ஒருவன் நான் அம்மணமாய் நின்றதை அனுப்பினான் எவ்வளவு நம்பினேன்? பொறுக்கி ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்திருக்கிறானே என் சக தோழிகளே! 

என் அம்மா அப்பாவின் மானத்தை பறித்தெடுத்த நான் இந்த உலகில் இனி வாழ்ந்து பயனில்லை சாகும் முன் இறுதியாக சொல்லி விட்டு போகிறேன் யாரையும் நம்பி உங்கள் அந்தரங்கங்களை விற்று விடாதீர்கள் படுபாவிகள் ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்து நாலு பேருக்கு காட்டி மகிழ்கிறார்கள் உண்மையாக காதலிப்பவனாக இருந்தாலும் காட்டி விடாதீர்கள் நான் போகிறேன் எப்படியும் இன்னும் சில நிமிடத்தில் இறந்து விடுவேன் முகப்பெல்லாம் என் அந்தரங்கம் தீயாய் பரவுகிறது அம்மா அப்பா தற்கொலை செய்யும் முன் பாவம் பண்ணாத அவர்களை வாழ விட்டு நான் போகிறேன்

 அடேய் படு பாவி நம்பித்தானையடா இருந்தேன் பெண்களே! இதோ!தூங்க போகிறேன் இறுதியாக ஒரு வார்த்தை எல்லா பெண்களும் சத்தியம் எடுங்கள் கட்டும் கணவனுக்கு மட்டுமே எங்கள் உடல் தெரியும் என்று இன்று எனக்கு நாளை உங்களுக்கு நாசமாய் போவீர்கள் என் சக பெண்களே! உங்களுக்காய் மன்றாடுங்கள் ஆழக்கடலில் ஒரு கவிஞன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.