June 16, 2021 at 11:02AM
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 மது என நினைத்து அமிலத்தை அருந்தியவர் மரணம். லொறியொன்றின் செயலிழந்த பெட்ரியின் அமிலத்தை மது என நினைத்து போதையில் பருகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் காலி- பட்டதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் என்றும் இவர் வாகனங்கள் திருத்துமிடம் ஒன்றின் உரிமையாளர் என்றும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் வாகன திருத்துமிடத்துக்கு லொறியொன்றின் பெட்ரி அமிலத்தை மாற்றுவதற்கு வருகைத் தந்த மூவருடன், இந்த நபர் மதுபானம் அருந்தியுள்ளார். இதன்போது தவறுதலாக பெட்ரியிலுள்ள அமிலத்தை பருகி உயிரிழந்துள்ளார். லொறியுடன் வாகன திருத்துமிடத்துக்கு வந்த நபர்களிடம் சட்டவிரோத மதுபான போத்தல் ஒன்றும் அமிலம் 2 போத்தலும் காணப்பட்டுள்ளதுடன், மதுபோதையில் அமிலத்தை பருகியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.