தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வசித்துவரும் சிங்கம் ஒன்றிற்கும் கொரோனா.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வசித்துவரும் சிங்கம் ஒன்றிற்கும் கொரோனா.
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வசித்துவரும் சிங்கம் ஒன்று கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி ,இந்த சிங்கம் 3 நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தமையினால், மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்கமைய, இருமல் மற்றும் தொண்டை நோவினால் சிங்கம் அவதிப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்பின்னர் சிங்கத்தின் சளி மாதிரி பேராதனை கால்நடை மருந்துவ பீடத்துக்கு அனுப்பப்பட்டு, அது தொடர்பான மேலதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய, குறித்த சிங்கத்துக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் 8 வருடங்களாக வசித்துவரும் 'தோர்' என்ற இந்த சிங்கம், கடந்த 2012 ஆம் ஆண்டு தென் கொரியாவிலிருந்து தேசிய மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த சிங்கத்துக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, சிங்கத்துக்கு பொறுப்பாக இருந்த மூவரைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தோர் வசித்து வரும் பகுதியில், இவ்வாண்டு கொண்டுவரப்பட்ட ஷீனா என்ற சிங்கமும், மேலும் 4 சிங்கங்களும் வசித்துவருகின்றன. இந்த விலங்குகளுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தெஹிவளை மிருகக்காட்சி சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. People News ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.