ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஐந்து வாரங்களுக்கு முன்னதாக அவசர நிலை அறிவிப்பு திருப்பப் பெறப்படும்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஐந்து வாரங்களுக்கு முன்னதாக அவசர நிலை அறிவிப்பு திருப்பப் பெறப்படும்.
ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் மீண்டு அதிகரிக்க தொடங்கியதால் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ மற்றும் பிற பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அவசரநிலை வரும் ஞாயிறன்று திரும்பப் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஜூலை 11 ஆம் திகதி வரை சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் நிலவும். பெரிய நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுவர். ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி தொடங்கப்படவுள்ளது. பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 24 திகதி தொடங்குகிறது.
ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவலை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதன் விளைவாக ஜப்பான் பிரதமர், மக்களை தொலைக்காட்சியில் போட்டிகளை கண்டு களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சர்வதேச பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. உள்ளூர் மக்கள் அனுமதிக்கப்படுவது குறித்தும் இன்னும் முடிவாகவில்லை. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.