காத்தான்குடியில் அனுமதிப் பத்திரமின்றி இயங்கி வந்த பாமசியில் போதையூட்டும் மாத்திரைகள் !

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 காத்தான்குடியில் அனுமதிப் பத்திரமின்றி இயங்கி வந்த பாமசியில் போதையூட்டும் மாத்திரைகள் ! 


இருவர் கைது ! காத்தான்குடியில், அனுமதிப் பத்திரமின்றி இயங்கி வந்த பாமசியொன்றை, விஷேட அதிரடிப் படையினர், நேற்று (18) வெள்ளிக்கிழமை (18) இரவு திடீரென சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர். 

அந்த தேடுதலின் போது, அந்த பாமசியிலிருந்து போதையூட்டக்கூடிய, மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், பாமசி உரிமையாளரும் மற்றுமொருவருமென இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப் படையினரின் உதவியுடன் குறித்த பாமசி முற்றுகையிடப்பட்டு, சுற்றிவளைத்து தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது. அத்துடன், வைத்தியர்களினால் மருந்து துண்டு இல்லாமல் மருந்துகள் வழங்கப்பட்டு வந்தமையும் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர் இதன் போது உணவு மற்றும் மருந்தக பரிசோதகர் சோதனை நடவடிக்கைகளை மேற் கொண்டதுடன் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ. எல். எம். நபீல். காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். பஷீர் ஆகியோர் ஸ்த்தலத்துக்கு சென்று விசாரணைகளை மேற் கொண்டனர் பாமசிக்கு சீல் வைக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.