தி பேமிலிமேன் 3' தொடரில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க திட்டம்!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் விடுதலைப்புலிகள் போராட்டத்தை அவதூறு செய்து இருப்பதாக கண்டனங்கள் எழுந்து தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.
இதில் போராளியாக வந்த சமந்தாவின் கதாபாத்திரமும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் மனோஜ்பாய், பிரியாமணி, மைம்கோபி, அழகம் பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்தொடரை ராஜ் மற்றும் டீகே இயக்கி இருந்தனர்.
இந்த நிலையில் தி பேமிலிமேன் தொடரின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. இதில் விஜய்சேதுபதியை முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி பேமிலிமேன் 2-வது சீசனிலேயே போராளி குழு தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகியதாகவும், ஆனால் அவர் மறுத்ததால் மைம் கோபியை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தமிழ் நடிகர்கள் நடித்த பேமிலிமேன் 2 தொடர் பிரபலமானதால் 3-ம் பாகத்தில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க அந்த தொடரின் குழுவினர் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய்சேதுபதி நடிப்பாரா? என்பது உறுதியாகவில்லை.
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.