தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம்.
பேருந்து சேவைகள் தொடர்பில் இதுவரை தீர்மானமில்லை. நடமாட்டத் தடை எதிர்வரும் 21ம் திகதி தளர்த்தப்படுகின்ற நிலையில் தொடருந்து சேவைகள் மீள இடம்பெறவிருப்பதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ண இதனைத் தெரிவித்துள்ளார். தொடருந்து சேவையின் போது, கடந்த காலங்களில் மாகாணங்களுக்கிடையே பின்பற்றப்பட்ட முறையே இந்த தடவையும் பின்பற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 21ம் திகதி காலை நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மீண்டும் எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 முதல் 25ம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நடமாட்டக்கட்டுப்பாடு அமுலாகும். எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை தொடர்ந்தும் நிலவும். இந்நிலையில் பேருந்து சேவைகள் தொடர்பாக இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.