தேர்தலை ஒத்திவைக்க நீதிமன்றத்தை நாடும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 தேர்தலை ஒத்திவைக்க நீதிமன்றத்தை நாடும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம். 

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த தேர்தலை எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்த தடைவிதித்து, உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர்கள் சிலர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தேர்தல் குழு தலைவர் வைத்தியர் மைத்ரி சந்ரரத்ன உள்ளிட்ட 10 பேர் பெயரிடப்பட்டுள்ளனர். 

அதேநேரம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தற்போதைய செயலாளருடன் அந்த பதவிக்காக போட்டியிடும் பிரியந்த அத்தபத்து கொழும்பு மாவட்ட மேல்நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளார். தேர்தல் குழு தலைவரினால் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்காக அறிவிக்கப்பட்ட வாக்கெடுப்பு அற்ற அந்த சங்கத்தின் நியமனங்களை வலுவிலக்கச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.