ஜூன் 23 முதல் இந்தியாவிற்கு மீண்டும் விமான சேவை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

ஜூன் 23 முதல் இந்தியாவிற்கு மீண்டும் விமான சேவை. 


வரும் 23-ஆம் திகதி முதல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்து உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

இதன்படி ,தங்கள் நாட்டிற்கு வருபவர்கள் 6 விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அமீரக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ஏதாவது ஒரு தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்திக் கொண்டதற்கான சான்று கொண்டு வர வேண்டும் என தெரிவித்து உள்ளது. மேலும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சான்று வேண்டும் என்றும், விமானம் ஏறுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பும் துபாயில் தரையிறங்கியதும் பி.சி.ஆர்.

 பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது., பரிசோதனை முடிவுகள் வரும் வரை பயணிகள் தனிமைப்படுத்துதலை முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.