சங்கக்காரவின் கிரிக்கெட் பற்றிய பார்வைகள்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
இங்கிலாந்துக் காலநிலை குளிராகவும் மழை மந்தாரமுமாக ( Overcast ) இருக்கும் போது கிரிக்கெட் பந்து இரண்டு பக்கமும் நகரும் தன்மையைக் கொண்டிருக்கும், ( In & Out Swinger ) இதற்குக் காரணம் சூரியனை மேகக்கூட்டங்கள் மறைப்பதால் வளிமண்டலத்தில் காணப்படக்கூடிய அதிக ஈரப்பதனே.
இப்படியான சூழலில் துடுப்பாட்ட வீரர்கள் தமது அடித்தெரிவில் ( Shot Selection ) மிகக் கவனமாக இருத்தல் வேண்டும், தமது விக்கெட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது எனக் கணிக்கும் பந்துகளை அடிப்பதற்கு முயற்சிக்கக்கூடாது , தனக்கு எதிராகப் பந்துவீசும் பந்துவீச்சாளனின் பலம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு ( Swinger / Seamer / Pacer ) அதனடிப்படையில் அவர் வீசக்கூடிய எந்தவகைப் பந்துவீச்சு தனக்கு ஆபத்தானது என உணர்ந்து முடிந்தவரை அவற்றை மட்டுமே எதிர்த்தாட முயற்சிக்க வேண்டும்.
இப்படியான மனநிலையுடன் ஆடும்போது அது கைகள் மற்றும் கால்களின் நகர்வில் திடத்தை ஏற்படுத்தி சரியான முறையில் பந்தை எதிர்த்து ஆடுவதற்கு வழிவகுக்கும் இதனை பார்வையாளர்களால் உணரவும் முடியும். -தற்போது நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியை வர்ணனை செய்துகொண்டிருந்தபோது சங்கக்கார கூறிய பல பிரயோசமான கிரிகெட் யுக்திகளில் மேற்கூறியவையும் அடங்கும், இவற்றைக் கேட்டு உரையாடிக்கொண்டிருந்த இயன் பிஷப் இறுதியில் கூறினார்.
எனக்கு கிரிக்கெட்டில் பல வருட அனுபவமிருந்தாலும் சங்காவுடன் கிரிக்கெட்டைப் பற்றி உரையாடும் போதெல்லாம் ,உண்மையில், கிரிக்கெட் பல்கலைக் கழகமொன்றில் பயில்வதாகவே நான் உணர்வதுண்டு. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.