சுதத் சமரவீரவின் இடமாற்றத்துக்கான காரணத்தை வெளிப்படுத்தினார் அமைச்சர் சுதர்ஷனி
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
கொரோனா மரணங்கள் குறித்த தவறான அறிக்கையே தொற்று நோய்ப் பிரிவின் பிரதானி சுதத் சமரவீரவின் இடமாற்றத்துக்கு காரணமென சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
தொற்று நோய்ப் பிரிவின் பிரதானி சுதத் சமரவீர, டெங்கு நோய் பிரிவுக்கு திடீரென இடமாற்றப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், 101 கொரோனா மரணங்கள் ஒரே நாளில் பதிவாகியதாக தெரிவிக்கப்படும் விடயத்தை ஆரோய்ந்த போது, ஜனவரி, பெப்ரவரி மாதம் பதிவான மரணங்களையும் சேர்த்து ஒரே நாளில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்தே அரசாங்கமும் சுகாதார தரப்பும் சில தீர்மானங்களை எடுக்கின்றன. எனவே சரியான தகவல்களை வழங்கும் பொறுப்பிலிருந்து விலகியமை பாரிய குற்றமாகும் என்றார்.
இது சதியெனக் கூறப்படுகின்றதே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இது சதியா அல்லது விதியா எனக் கூறமுடியாது. ஏனெனில் நாட்டை தவறாக வழிநடத்தும் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது” என்றார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, சிரித்தவாறே பதில் எதுவும் கூறாமல் தனது வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.