மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் 


மின்சார முறைபாடுகள் குறித்து விசாரித்து தீர்வு காணும்வகையில் மின்சாரத்துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுஅவசர தொலைபேசி இலக்கமொன்றை 0775 687 387 அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா பிரச்சினை காரணமாக மின்சார பாவனையாளர்கள் முறைபாடுகளை தெரிவிக்க 0775 687 387 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினை தொடர்புகொள்ளலாம்.

 இந்த இலக்கத்தினூடாக வாட்ஸ்அப்,வைபர் மற்றும் இமோ மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.இதுதொடர்பாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா பிரச்சினை காரணமாக மின்சார பாவனையாளர்கள் முறைபாடுகளை 0775 687 387 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும்.

 பாவனையாளர்கள்தங்கள் எழுத்து மூலமான முறைப்பாடுகளை ஒரு புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தின்ஊடாக பதிவேற்றுவதன் மூலம் அல்லது குறுந்தகவலாக டைப் செய்து சமர்ப்பிக்குமாறுகேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

குறுகிய காலத்தில் சிறப்பான சேவையைபெற்றுக்கொடுப்பதற்கு பெயர், முகவரி, தொலைப்பேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி (இருப்பின்), மின்சார கணக்கு இலக்கம், முறைப்பாடு விபரம்,தொடர்புடைய இணைப்புகள் (இருப்பின்) ஆகியவற்றை குறிப்பிடுமாறுபாவனையாளர்கள் தயவுசெய்து அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முறைப்பாடுசமர்ப்பிக்கப்பட்ட பின்னர், குறிப்பு இலக்கமொன்றுபாவனையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விசாரணைகள் தொடர்பில் கேட்டறியவும்,முறைப்பாடுகளை தாக்கல் செய்யும் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால்,பாவனையாளர் மேற்படி இலக்கத்தின் ஊடாக ஒரு அதிகாரியைதொடர்புகொள்ளலாம்.

 அதற்கமைய அதிகாரிகளை நேரில் சந்திப்பதை தவிர்த்து ஒன்லைன்மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களும்,ஏனைய பங்குதாரர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இச்சேவைக்குமேலதிகமாக,பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்கள் 0112392607அல்லது 0112392608என்ற தொலைப்பேசி இலக்கங்கள் மற்றும் info@pucsl.gov.lk அல்லதுcustomers@pucsl.gov.lk அல்லது www.facebook.com/pucsl ஊடாகஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை தொடர்புகொள்ளலாம். 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.