அடுத்த புரட்சி நாயகன் அதர்வா தான்... புகழும் ராஜமோகன்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
அதர்வா முரளி நடித்துள்ள அட்ரஸ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பிரிவினைகளால் சில கிராமங்களில் அட்ரஸ் இல்லாமல் போகும் நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ரெண்டாவது பாட்ட ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன்... உங்களுக்கு போட்டுக் காட்டணும்... யுவன் அப்டேட் ரெண்டாவது பாட்ட ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன்... உங்களுக்கு போட்டுக் காட்டணும்... யுவன் அப்டேட் இந்த படம் பற்றி டைரக்டர் ராஜமோகன் கூறுகையில், 1956 ல் கேரள மாநிலம் உருவாக்கப்பட்ட போது பல கிராமங்கள் காணாமல் போகின.
அங்கிருந்தவர்கள் கேரளாவிற்கு செல்வதா, தமிழகத்திற்கு செல்வதாக என தெரியாமல் தவித்தனர். அட்ரஸ் கதை எப்படி வந்தது. அதே போன்று ஒரு கிராமத்தை பற்றி ஒரு கட்டுரையில் 2016 ல் படித்தேன். இந்தியா - பங்களாதேஷ் பிரிவினையின் போது காணாமல் போன கிராமம் பற்றியது.
சில குடும்பங்கள் இன்னும் அதே கிராமத்தில் தான் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த அடையாளமும் இல்லை. தாக்கத்தை தந்த கட்டுரை தாக்கத்தை தந்த கட்டுரை எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரியாது. இந்த சம்பவங்கள் எனக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அட்ரஸ் இல்லாத இது போன்று ஒரு கிராமத்தின் கதையை திரைக்கதை ஆக்க வேண்டும் என முடிவு செய்தேன்.
புரட்சி இளைஞராக அதர்வா இந்த படத்தில் அதர்வா, கோலி சோடா 2 ல் நடித்த இசக்கி பாரத், பூஜா ஜவேரி, தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் புரட்சி இளைஞரான காளி ரோலில் அதர்வா நடிக்கிறார்.
தனது கிராமத்திற்காக போராடும் இளைஞர் ரோல். அடுத்த புரட்சி நாயகன் அதர்வா அடுத்த புரட்சி நாயகன் அதர்வா அவரது தந்தை முரளியை புரட்சி நாயகன் என்பார்கள். அந்த பட்டத்தை யாருக்காவது கொடுக்க சொன்னால் அதர்வாவிற்கு தான் கொடுப்பேன்.
எனக்கு முரளி சாரை முன்பிருந்தே தெரியும். எனது குங்கும பூவும் கொஞ்சும் பூராவும் கதையை முதலில் அதர்வாவிற்காக தான் எழுதினேன். அவருக்கு அந்த கதை பிடித்திருந்தது. ஆனால் எங்களால் சேர்ந்து பணியாற்ற முடியவில்லை. அட்ரஸ் கதை அவருக்கும் தெரிந்திருந்தது. அதனால் இந்த படத்தில் ஒன்றாக இணைய திட்டமிட்டோம் என்றார். படப்பிடிப்பு அனுபவம்.
கொடைக்கானல் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது. கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் இருக்கும் வெள்ளகாவி பகுதியில் இதனை படமாக்குகினோம். டிரக்கிங் பாதையில் தான் அந்த கிராமத்தை அடைய ஒரே வழி. ஒன்று நடந்து போக வேண்டும் அல்லது குதிரையில் போக வேண்டும். எங்கள் பொருட்களை எடுத்துச் செல்ல சைக்கிளை கூட பயன்படுத்த முடியவில்லை. டென்ட்களில் தான் தங்கினோம். படத்தின் பெரும்பாலான பகுதிகள் அங்கு தான் படமாக்கப்பட்டது. சிறிய பகுதியை சென்னையில் படமாக்கினோம் என்றார்.
தியேட்டரில் தான் ரிலீஸ். தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடப்பதாக கூறிய ராஜமோகன், மொத்தம் 5 பாடல்கள். இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். டீசருக்கு கவுதம் மேனன் வாய்ஸ்ஓவர் பேச வைத்தோம். அவரது குரல் ரொம்ப பவர்ஃபுல். நிலைமை சரியானதும் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.