03 மாவட்டங்களின் 07 GS பிரிவுகள் உடனடியாக லொக்டவுன் செய்யப்பட்டன.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 03 மாவட்டங்களின் 07 GS பிரிவுகள் உடனடியாக லொக்டவுன் செய்யப்பட்டன. 


இன்று (24) காலை 6 மணி முதல் 3 மாவட்டங்களில் உள்ள 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

 குருணாகலை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த 7 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதனடிப்படையில் #யாழ்ப்பாண_மாவட்டத்தின், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் மேற்கு மற்றும் ரெக்லமேசன் மேற்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 அத்துடன் #மட்டக்களப்பு_மாவட்டத்தில், காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சதொடுவாய் வடக்கு மற்றும் மஞ்சதொடுவாய் தெற்கு ஜின்னா வீதி கிராம சேவகர் பிரிவும், மண்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 இதேவேளை, #குருணாகல்_மாவட்டத்தில், இழுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் வில்கொட கிராமும், கனுக்கெட்டிய கிராம சேவகர் பிரிவின் கனுக்கெட்டிய கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.