எந்த நேரத்திலும் நாடு முடங்கக்கூடும்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
நாட்டில் பதிவாகும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று மற்றும் இறப்பு நிலைவரங்களின் அடிப்படையில் எந்த நேரத்திலும் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார். நாட்டில் இனிமேல் முழுமையான பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை , மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். இத்தோடு , நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் எந்தவொரு ஒன்றுகூடல்களையும் நடத்த அனுமதி இல்லை எனவும் அவர் கூறினார்.
மேலும் ,சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை மட்டுமே பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிக்கு அழைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.