நாடு திரும்பிய இலங்கை வீரர்கள் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப் படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 நாடு திரும்பிய இலங்கை வீரர்கள் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப் படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று முன்தினம் (27) இரவு டராம் நகரில் சுற்றித்திரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது அதனடிப்படையில் குறித்த மூன்று வீரர்களுக்கும் எதிராக தற்காலிக போட்டித்தடை விதித்து அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்தது. 

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில் இந்த தற்காலிக தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் இன்று பிற்பகல் 1.15 மணிக்கு ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 504 என்ற விமானத்தில் அவர்கள் மூவரும் லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். 

இவ்வாறு விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள் நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.