Happy Birthday முனீஷ்காந்த் ராமதாஸ்
Happy Birthday முனீஷ்காந்த் ராமதாஸ்
30 Jun 1978 (Age 43) முனீஷ்காந்த் ராமதாஸ் (ராமதாஸ்) என இயற்பெயர் கொண்ட இவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பவர்.
இவர் திரைப்பட நடிகராக வேண்டும் என்னும் கனவோடு 2002-ம் ஆண்டு சென்னைக்கு வந்தவர். பின்பு படவாய்ப்பு கிட்டாததால் இரண்டு வருடம் மலேசியாவில் கோல்ட்ஸ்மித் வேளைக்கு சென்றுள்ளார்.
பின்னர் தங்க இடமில்லாமல் வடபழனி கோவிலில் பல இரவுகள் கழித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சி நடத்திய "நாளைய இயக்குனர்" தொடரில் வெற்றிபெற்ற முண்டாசுப்பட்டி என்னும் திரைப்படத்தில் தனது நண்பன் காளி வெங்கட் மூலம் இப்படத்தில் முனீஷ்காந்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இக்குறும்படத்தின் வெற்றியை தொடர்ந்து இக்குறும்படத்தின் கதையை படமாக 2014-ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்துள்ளது. இவர் இக்கதையிலும் முனீஷ்காந்த் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
தற்போது பல முன்னணி நடிகர்களோடும், பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.