சாணிக் குழிக்குள் விழுந்து இரண்டரை வயது குழந்தை மரணம்...
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
சாணிக் குழிக்குள் விழுந்து இரண்டரை வயது குழந்தை மரணம்...
மாட்டுச் சாணியைக் கொட்டுவதற்காக, தமது வீட்டுத் தோட்டத்தில் வெட்டி வைக்கப்பட்டிருந்த குழிக்குள் விழுந்து இரண்டரை வயதான ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இதன்படி ,மஸ்கெலியா- ப்ரௌண்ஸ்வீக் தோட்டத்தைச் சேர்ந்த ஜெயசுந்தரம் சுலக்ஷன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்று (29) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், வீட்டுக்குள் இருந்த குழந்தையை காணாது தேடிய பெற்றோர்,குழந்தை வீட்டுத்தோட்டத்திலுள்ள சாணியைக் கொட்டுவதற்கான கழிவுக்குழியில் விழுந்திருப்பதை கண்டு, மீட்டுள்ளதுடன் மஸ்கெலியா வைத்தியசாலைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர்.
அதன்படி ,குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ,சடலம், மஸ்கெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.