மீண்டும் ஆரம்பமானது ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள்.
மீண்டும் ஆரம்பமானது ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள்.
எதிர்வரும் 5ஆம் திகதி முதல் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கமைய, தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு மாத்திரமே சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி பிரதேச செயலகங்களில் உள்ள அடையாள அட்டை பிரிவுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் முன்பதிவு செய்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஏற்கனவே பதிவு செய்தவர்களின் அடையாள அட்டைகள் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி முன்பதிவை மேற்கொள்ளலாம்
👉பத்தரமுல்லை பிரதான அலுவலகம் – 01152261126 / 0115226100
👉தென் மாகாண அலுவலகம் – 0912228348
👉வடமேல் மாகாண அலுவலகம் – 0375554337
👉வடமாகாண அலுவலகம் – 02422272201
👉கிழக்கு மாகாண அலுவலகம் – 0652229449
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.