HAPPY BIRTHDAY எஸ் ஏ சந்திரசேகர்
HAPPY BIRTHDAY எஸ் ஏ சந்திரசேகர்
02 Jul 1945 (Age 75) எஸ் ஏ சந்திரசேகர் இந்திய திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என திரைத்துறையில் பணியாற்றி வரும் பிரபலம்.
இவர் 1978-ஆம் ஆண்டு "அவள் ஒரு பச்சை குழந்தை" என்னும் தமிழ் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக தமிழ் திரையில் அறிமுகமானவர்.
பின்னர் தனது படைப்புகளில் பல வித்தியாச காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் ரசிகர்களை கவரந்த இவர், தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றி இந்திய அளவில் புகழ் பெற்ற பிரபலம் ஆவார்.
👉பிறப்பு எஸ் ஏ சந்திரசேகர், தென்தமிழகம் ஆனா ராமேஸ்வரத்தில் பிறந்தவர், பின்னர் கோவையில் தஞ்சம் புகுந்து கோவையை இருப்பிடமாய் கொண்டு புகழ் பெற்றவர். தற்போது சென்னையில் பல திரைப்படங்களை இயக்கி பிரபலமாக வாழந்து வருகிறார்.
👉திரைப்பட தொடக்கம் 1978-ஆம் ஆண்டு "அவள் ஒரு பச்சை குழந்தை" என்ற தமிழ் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர். ஆனால் இத்திரைப்படம் இவருக்கு வெற்றியை பெற்று தரவில்லை. பின்னர் 1981-ஆம் ஆண்டு "சட்டம் ஒரு இருட்டறை" என்ற திரைப்படத்தினை இயக்கி பிரபலமானார். இப்படமானது தமிழில் மிக பெரிய வெற்றியை பெற்று புகழ் பெற்றது. தனது திரைப்பட தொடக்க காலத்தில் இவர், தொடர்ந்து நடிகர் விஜயகாந்த்-யை நாயகனாக கொண்டு பல வெற்றி படங்களை இயக்கி புகழ் பெற்றார்.
👉திரை அனுபவம் எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் திரைப்படத்தினை இயக்கி புகழ் பெற்ற இவர், பின்னர் கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் இயக்குனர் மற்றும் நடிகராக பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். 1981ஆம் ஆண்டு தெலுங்கிலும், 1982-ஆம் ஆண்டு கன்னட திரையுலகிலும், பின்னர் 1985-ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக அந்தந்த மொழிகளில் அறிமுகமானார்.
👉எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான பிரபல படங்கள்.
✔️சட்டம் ஒரு இருட்டறை
✔️நான் சிவப்பு மனிதன்
✔️சட்டம் ஒரு விளையாட்டு ✔️செந்தூரபாண்டி
👉பிரபலம் எஸ் ஏ சந்திரசேகர், இந்திய திரைத்துறையில் அதிக ரசிகர்களை கொண்டு புகழ் பெற்ற நடிகராக திகழும் "தளபதி" விஜய்-யின் தந்தை ஆவார். நடிகர் விஜய் ஆரம்ப காலத்தில் நடித்த படங்களான ரசிகன், தேவா, விஷ்ணு, ஒன்ஸ் மோர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனரும் எஸ் ஏ சந்திரசேகர் ஆவார்.
திரைத்துறையில் புகழ் பெற்ற பாடகரான திருமதி. ஷோபா என்பவரை மணந்துள்ளார். திருமதி ஷோபா பாடகர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் என இவரும் தமிழ் திரையுலகில் பணியாற்றி பிரபலமானவர்.
எஸ் ஏ சந்திரசேகர் இதுவரை நடிகர் விஜயகாந்த் உடன் 19 திரைப்படங்களிலும், நடிகர் விஜய்யின் 9 திரைப்படங்களிலும் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.