இரண்டாவது ODI போட்டியிலும் இங்கிலாந்துக்கு வெற்றி.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
இரண்டாவது ODI போட்டியிலும் இங்கிலாந்துக்கு வெற்றி.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்று கொண்டது.
துடுப்பாட்டத்தில் தனஞ்ஜய டி சில்வா 91 ஓட்டங்களை அதிகபடியாகப் பெற்றுக் கொடுத்தார். போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 43 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது 244 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கை அடைந்தது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் அணித்தலைவர் இயொன் மோர்கன் 75 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக் கொடுத்த அதேவேளை, ஜோ ரூட் 68 ஓட்டங்களையும், ஜேசன் ரோய் 60 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன்படி இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் சேம் கரன் தெரிவானார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.