தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்ட ஒரு ரசிகருக்கு மீனா அளித்த பதில் என்ன?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்ட ஒரு ரசிகருக்கு மீனா அளித்த பதில் என்ன? 

சினிமா பிரபலங்கள் முதல் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் வரை சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாகவே இருந்து வருகிறர்கள்.

 சோஷியல் மீடியாக்களில் தங்களை பின்தொடரும் ஃபாலோயர்ஸை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் கேள்வி பதில் செஷனை அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.

 இதனால் பிரபலங்களை சோஷியல் மீடியாவில் ஃபாலோ செய்பவர்களும், ரசிகர்களும் உற்சாகமாகி விடுகின்றனர். மற்றவர்களை போல பெண் சினிமா பிரபலங்களும் தங்களது அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியாவில் question and answer session நடத்தி வருகின்றனர்.

 அந்த வகையில் 1990-களில் தமிழ் திரையுலகில் சிறந்த கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை மீனா இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கிறார். நடிகை மீனாவை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்ஸ்டாவில் ஃபாலோ செய்து வருகின்றனர். 

இந்நிலையில் மீனா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் தனது ஃபாலோயர்ஸ்களுக்காக சமீபத்தில் கேள்வி பதில் செஷனை நடத்தினார். 

இந்த செஷனின் போது ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஒளிவு மறைவின்றி பதில் அளித்தார் மீனா. தன்னிடம் கேள்வி கேட்க நினைப்பவர்கள் கேள்விகளை கேட்கலாம் என்றும் அறிவித்த மீனா, ரசிகர்களிடம் இருந்து சுமார் 10,000-க்கும் மேற்பட்ட கேள்விகளை பெற்றார். 

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நடிகை மீனா சில சிக்கலான கேள்விகளுக்கு கூட பொறுமை இழக்காமல், கோபப்படாமல் பக்குவமாக லேசான முறையில் பதிலளித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்ட ஒரு ரசிகருக்கு பதில் அளித்த மீனா, கணவருடன் மணக்கோலத்தில் இருக்கும் ஃபோட்டோவை ஷேர் செய்து கொஞ்சம் லேட் என்று கண்சிமிட்டும் ஃபன் எமோஜியுடன் வேடிக்கையாக பதில் கொடுத்துள்ளார். 

இது தவிர அவர் தனது நடிப்பில் வரவிருக்கும் படங்கள், திரைப்படத் துறை அனுபவம் மற்றும் அவரது மகள் நைனிகா பற்றிய பல கேள்விகளுக்கு பதிலளித்தார். தனது வயது எவ்வளவு என்று வயதை பற்றி கேள்வி எழுப்பிய ரசிகர் ஒருவருக்கு “பெண்களின் வயதைக் கேட்பது நாகரிகமானதல்ல என்பது உங்களுக்குத் தெரியாதா” என்று மேற்சொன்ன அதே ஃபன் எமோஜியை பதிவிட்டு வேடிக்கையாக பதில் அளித்துள்ளார்.

 மற்றொரு ரசிகர் என்னைக்காவது சினி ஃபீல்டுக்கு எதுக்காக வந்தோம்னு ஃபீல் பண்ணி இருக்கீங்களா.? என்று எழுப்பிய கேள்விக்கு "பல தடவ" என்று கண்ணில் கண்ணீர் வர சிரிக்கும் எமோஜியுடன் பதில் கூறி உள்ளார் நடிகை மீனா.

 மற்றொரு ரசிகர் நான் 20 ஆண்டுகளுக்கு முன் சென்று மீண்டும் பிறந்து உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று கூறியதற்கு, நல்ல ஆசை என்ற பொருள்படும்படி 'Awww 'என்று குறிப்பிட்டுள்ளார் மீனா.

 தனுஷ் அல்லது சிம்பு இருவரில் சிறந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு சாமர்த்தியமாக இருவரும் என்று பதில் அளித்துள்ளார். தமிழில் பாபநாசம் 2-வில் நீங்கள் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நடிகர் கமலிடம் கேளுங்கள் என்று கூறி உள்ளார். 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.