கொடுத்த கடனை கேட்க சென்றவர் மீது தந்தையும் மகனும் கொலை வெறி தாக்குதல்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
கொடுத்த கடனை கேட்க சென்றவர் மீது தந்தையும் மகனும் கொலை வெறி தாக்குதல்.
யாழ்.கோண்டாவில் கொடுத்த கடனை கேட்க சென்றவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
கடனை கேட்க சென்றவர் மீது, தந்தையும் மகனும் இணைந்து அவரின் தலை மற்றும் கழுத்தில் வாளினால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மோகனராஜா ரஜீவன் (வயது-37) என்பவரே படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது இதையடுத்து தாக்குதல் நடத்திய இருவரும் கைது செய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.