பிரம்மாண்டமாக நடைபெற்ற சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்..

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 பிரம்மாண்டமாக நடைபெற்ற சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்..

மணமக்களுக்கு மரக்கன்று வழங்கிய ஸ்டாலின் . நடிகர் பொன்வண்ணன், நடிகை சரண்யா தம்பதியின் மூத்த மகள் ப்ரியதர்ஷினிக்கும், விக்னேஷ் என்பவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது. 

இதையடுத்து சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை அடுத்து நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் மனைவி துர்காவுடன் கலந்து கொண்டார். மணமக்களுக்கு மரக்கன்றுகள் அடங்கிய பசுமைக்கூடையை பரிசாக அளித்து வாழ்த்தினார். 

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 27ம் தேதி மகாபலிபுரத்தில் நடந்த இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணமத்திலும் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டார்கள். 

ஐஸ்வர்யாவுக்கும் பசுமைக்கூடையை பரிசாக அளித்தார் ஸ்டாலின். திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால், மணமக்களுக்கு மரக்கன்றுகள் அடங்கிய பசுமைக்கூடையை ஸ்டாலின் பரிசாக கொடுப்பது பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருவதால் திருமண நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடக்கத் துவங்கியிருக்கின்றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.