இலங்கை கிரிக்கெட் அணித்தலைவராக தசுன் சானக்க.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
இலங்கை கிரிக்கெட் அணித்தலைவராக தசுன் சானக்க.
இந்தியா அணிக்கு எதிரான தொடரில் இலங்கையின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணியின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் குசல் ஜனித் பெரேராவுக்கு பதிலாக சகலதுறை வீரர் தசுன் சானக்க இலங்கை அணிக்கு தலைவராக செயற்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 13, 16 மற்றும் 18 ஆம் திகதிகளில் ஒருநாள் சர்வதேச போட்டிகளும், எதிர்வரும் 21, 23 மற்றும் 25 ஆம்திகதிகளில் இருபதுக்கு இருபது போட்டிகளும் இடம்பெறவுள்ளன. மேற்படி ஆறு போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
இங்கிலாந்துடனான தொடரில் பங்கேற்று நாடுதிரும்பிய இலங்கை அணியினர் தற்போது விடுதிகளில் அவசியமான தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, எதிர்வரும் 10 ஆம்திகதி சனிக்கிழமை இலங்கை அணியினர் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.