பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட அதிரடி கருத்து.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட அதிரடி கருத்து. 

கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் மீள ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவிக்கின்றார். 

அதன் முதற்கட்டமாக நாடு முழுவதும் 100ற்கு குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் 2,962 பாடசாலைகளை திறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்கும் நோக்குடன் ஜுலை மாதம் 12ம் திகதி முதல் ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். 

சுமார் 2,42,000 ஆசிரியர்கள் இருக்கின்ற போதிலும், பெரும்பாலான ஆசிரியர்கள் தற்போதே தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறுகின்றார். மேலும் ,இவ்வாறு ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, 100 மாணவர்களுக்கு குறைவாக இயங்கும் பாடசாலைகளை ஆகஸ்ட் மாதமளவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவிக்கின்றார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.