உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை.!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை.!
1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். (ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.) 2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)
3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது. (சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது.... (எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)
5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே... (நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.... (மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.) இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...!
► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...! நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. ஓடுவது முள் அல்ல..! உன் வாழ்க்கை... - வாரன் பபேட்
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.