பேரிக்காயில் இவ்வளவு மருத்துவ குணங்களா?.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

பேரிக்காயில் இவ்வளவு மருத்துவ குணங்களா?. 

ஏழைகளின் ஆப்பிள், இந்தியாவின் ஆப்பிள் என்று புகழப்படும் பழம் பேரிக்காய். 

பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சேர்ந்த பழமாகும். இதில் ஆப்பிளில் அறவே இல்லாத விட்டமின் 'ஏ 'சத்து நிறைய உள்ளது. குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டிய பழம் பேரிக்காய். 

இது கர்ப்பிணி பெண்களுக்கும் ஆரோக்கிய பயன்கள் தரவல்லது. பேரிக்காயில் இருந்து கிடைக்கும் சுண்ணாம்பு சத்து மற்றும் இரும்பு சத்து நமது உடலுக்கு மிகவும் தேவையானது. பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக்கூடியது . 

வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது சுவைமிகுந்த பழங்களில் ஒன்று. பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும்.

 பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும். இதில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

 பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம்தான்.

 சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள். 

100 கிராம் பேரிக்காய் துண்டில் 58 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை, கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும். 

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது. நன்மைகள்: கர்ப்பிணிப் பெண்களுக்கு: கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. 

கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து. தாய்ப்பால் சுரக்க: பிறந்த இளம் குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த ஊட்டச் சத்து மிகுந்த உணவாகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.

 குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம்.சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இதயப் படபடப்பு நீங்க: இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

 வாய்ப்புண் குணமாக: வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும். வயிற்றுப் போக்கு: உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும். சிறுநீரக கல்லடைப்பு நீங்க: இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. 

இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது. வளரும் குழந்தைகளுக்கு: குழந்தைகளுக்கு அதிக சத்துகளை அளிக்கும் பேரிக்காய்.வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன.

 பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது.பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள். 

சர்க்கரை நோயைத் தடுக்கும் : பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே. பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயணங்கள் இன்சுலின் உணர்திறனை (சென்சிவிட்டி) மேம்படுத்துகிறது. மருத்துவ பயன்கள்: 

* வாத நோயினை சரிசெய்யும்.

 * தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும். 

* இரத்த அழுத்தம், பெருங்குடல் பிரச்சனை, ஆஸ்துமா போன்றவற்றிற்கு சிறந்த பானமாகும். 

* உடல் சூட்டைத் தணிக்கும். 

* கண்கள் ஒளிபெறும்.

 * நரம்புகள் புத்துணர்வடையும்.

 * குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும்.

 * யூரிக் அமிலம் உடலில் அதிகமாக சுரந்து, அது உடலிலிருந்து வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டால் கணுக்காலில் வீக்கம் ஏற்படும். 

இந்த யூரிக் அமிலத்தை வெளியேற்றும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது. பேரிக்காயில் நாட்டுப்பழங்களை உண்பது மிகவும் சிறந்தது.

 தற்போது பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், பழங்களை சாதாரணமாகக் தண்ணீரில் கழுவுவதற்குப்பதில், வெந்நீரில் கழுவி உண்பது மிகவும் அவசியம். 

பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் உண்டு அதன் மருத்துவப் பயன்களை முழுமையாகப் பெறுவோம்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.