கொரோனாவை தொடர்ந்து எகிறும் ‘டெல்டா’.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
கொரோனாவை தொடர்ந்து எகிறும் ‘டெல்டா’.
கொரோனாவை தொடர்ந்து எகிறும் ‘டெல்டா’.
நாட்டில் டெல்டா கொரோனா பிறழ்வு தொற்றுக்குள்ளான 24 நோயாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு பொதுமக்கள் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், நாட்டில் டெல்டா கொரோனா வைரஸ் பிறழ்வு பரவியுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் 96 உயிரி மாதிரிகளை கொண்டு இந்த ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இந்த மாதிரிகள் எழுமாறாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் முடிவுகளை இன்னும் ஒரு வாரத்தில் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.