தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 190 பேர் கைது.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 190 பேர் கைது.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 190 பேர் கைது.
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 190 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 50,027 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் சுமார் 43,000 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. எஞ்சிய சுமார் 7,000 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில், குற்றவாளியாகும் நபர் ஒருவருக்கு, 10,000 ரூபா அபராதமும், 6 மாத சிறைத் தண்டனையும் நீதிமன்றினால் விதிக்க முடியும் என காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.