ஜெர்மனி, சுவிட்சர்லாந்தில் மழை, வெள்ளத்துக்கு 70 பேர் உயிரிழப்பு
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதுவரை 70க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி ,ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
ஜெர்மனியின மேற்குப் பகுதியில் உள்ள Rhineland Palatinate மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளும் கட்டிடங்களும் உருக்குலைந்து கிடக்கின்றன.
வீட்டின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. ஜெர்மனியில் வெள்ளத்தில் சிக்கி ஏறத்தாழ 58 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ,பெல்ஜியத்தில் வாலோனியா மாகாணத்தில் கனமழை காரணமாக எங்கும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க இத்தாலி விமானப்படை விமானங்கள் விரைந்துள்ளன.
லெய்ஜ் (Liège) நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
முக்கிய பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் பொது மக்கள் வாகனங்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இதற்கமைய ,ஐரோப்பிய நாடுகளில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.