டெல்டா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் அதிகரிக்கும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
டெல்டா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் அதிகரிக்கும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
டெல்டா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அடுத்த இரண்டுவாரங்களில் அதிகரிக்க கூடும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழுவின் உறுப்பினர் வைத்தியர் ருவான் ஜெயசூரிய இதனை தெரிவித்துள்ளார். போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மேலும் நோயாளிகள் அடையாளம் காணப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் டெல்டா வைரஸ் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கு பரவும் என அவர் தெரிவித்துள்ளார்.
அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இறப்பு வீதம் இந்தியா போன்ற நாடுகளிற்கு சமமாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தொடர்ந்தும்சமூக விலக்கலை பின்பற்றவேண்டும் முக்கவசங்களை அணியவேண்டும்,என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் பலாபலன்கள் உடனடியாக தென்படாது சில மாதங்கள் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.