#தியாகத்_திருநாளாம்_ஹஜ்_பெருநாள்_இன்று.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
தியாகத்_திருநாளாம்_ஹஜ்_பெருநாள்_இன்று.
தியாகத்_திருநாளாம்_ஹஜ்_பெருநாள்_இன்று.
இலங்கையில் வாழும் இஸ்லாமிய மக்கள் அனைவரும் இன்று (புதன்கிழமை) தியாகத் திருநாளாம் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பத்தாம் பிறையில் புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் ஹஜ் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் உழ்ஹிய்யா கடமையையும் நிறைவேற்றுவார்கள்.
இறைதூதரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைகூருவதாக இந்நாள் அமைவதால், இத்திருநாளுக்கு தியாகத் திருநாள் என்ற பெயர் வந்தது. அதாவது, சுமார் 4,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இறைதூதரான இப்ராஹிம் நபியானவர், நீண்ட காத்திருப்பின் பின்னர் கிடைத்த தனது மகனை இறை கட்டளையின் பிரகாரம் பலியிட துணிந்துள்ளார்.
இத்தியாகத்தை கண்டு மெய்சிலிர்த்த இறைவன் அதனை தடுத்து, ஒரு ஆட்டை இறக்கி பலியிட வைத்துள்ளார். இந்த வரலாற்றை கூறும் திருநாளாகவே ஹஜ் பெருநாள் அமைகின்றது. ஹஜ் பெருநாளை முன்னிட்டு இலங்கையில் அனைத்து பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று காலை விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. இஸ்லாத்தின் ஐந்து கடமைகளுள் மிக முக்கியமானதும் இறுதியுமான கடமையாக ஹஜ் திகழ்கின்றது.
இக்கடமையை நிறைவேற்றும் பொருட்டு வசதிபடைத்தவர்கள் மற்றும் தேக ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள் யாவரும் மக்கா செல்வது வழமை. ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, உலகின் சகல பாகங்களில் இருந்தும் புனித மக்கா மாநகரில் மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளை கடந்து இலட்சக்கணக்ககானவர்கள் ஒன்றுகூடி பிரார்த்தனையில் ஈடுபடுவது இந்த தினத்தின் விசேட அம்சமாகும்.
ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய அன்பர்களுக்கும் INTERNATIONAL தமிழ் MEDIA ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ #WHATSAPP_GROUPS 👇👇👇👇 https://ift.tt/3pNtsux #FACEBOOK_PAGE 👇👇👇 https://ift.tt/3hk68md #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan WEBSITE 👇👇👇 https://ift.tt/3bgkArn #விளம்பரங்களுக்கு 👇👇👇 https://ift.tt/3fKZbt1
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.